» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

சனி 7, மார்ச் 2026 5:37:23 PM (IST)

வங்க ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மரியாதை நிமித்தமாகச் சந்தித்து, மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார். இதையடுத்து, கேரளா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.தர்மாதிகாரி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவர், புதிதாகப் பதவியேற்ற சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். பின்னர் அவருக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாட்களில் மேற்கு வங்க ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து, மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory