» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக - காங்கிரஸ் கூட்டணி புதிய வரலாறு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

வியாழன் 5, மார்ச் 2026 11:23:06 AM (IST)

தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஒரே கூட்டணி தொடர்ந்து நான்கு தேர்தல்களை (2019, 2021, 2024 மற்றும் தற்போது 2026) சந்திப்பது இதுவே முதல்முறை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத் திருமண விழாவைத் தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்தும் தமிழக அரசியல் வரலாறு குறித்தும் முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத் திருமண விழா இன்று சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இவ்விழாவில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.

திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசியல் களம் குறித்தும் உரையாற்றினார். அவர் பேசியதாவது:    "காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அந்த மனநிறைவோடு இந்தத் திருமண விழாவிற்கு வந்திருக்கிறேன். அனைவரும் பாராட்டும் வகையில் எங்களது தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் அமைந்துள்ளது."

தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஒரே கூட்டணி தொடர்ந்து நான்கு தேர்தல்களை (2019, 2021, 2024 மற்றும் தற்போது 2026) சந்திப்பது இதுவே முதல்முறை. இது ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை. கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு அமைந்த கூட்டணி, அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை நீடித்தது இல்லை. ஆனால், திமுக தலைமையிலான இந்தக் கூட்டணி கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து தொடர்ந்து பயணிக்கிறது" என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இதுவரை எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்து விடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory