» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய் 3, மார்ச் 2026 3:09:41 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வங்கி தொடர்புடைய அரசு திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும், அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பொருட்டு "மாவட்ட வாழ்வாதார மற்றும் கடன் மேலாண்மை நிறுவனம்" நிறுவப்பட உள்ளது. இதற்காக மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் (District Banking Co-Ordinator) பணியிடத்திற்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரங்கள்:

பதவியின் பெயர்மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் 

காலியிடங்களின் எண்ணிக்கை 01 

பணி நியமன முறைஓய்வு பெற்ற வங்கி அலுவலர் (ஒப்பந்த அடிப்படையில்) 

மாதாந்திர ஊதியம் ரூ. 50,000/- 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 09.03.2026 மாலை 5.45 மணி வரை.

குறிப்பு: குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

தொடர்பு முகவரி: 

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம், கன்னியாகுமரி மாவட்டம்.

மின்னஞ்சல்: [email protected] தொலைபேசி: 04652-278449 

இத்தகவலை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் . ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory