» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓபிஎஸ் சேர்க்கை திமுகவுக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்: தமிழிசை கருத்து!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:32:51 PM (IST)
ஓபிஎஸ் இணைந்துள்ளதால் திமுகவுக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்தார்.
ஓபிஎஸ் போன்றவர்களை சேர்த்துக்கொண்டு அவர்கள் தான் திமுகவிற்கு மிகப்பெரிய பலம் என்று ஸ்டாலின் சொல்கிறார் என்றால் திமுகவின் பரிதாப நிலையை தான் எண்ண வேண்டி இருக்கிறது. ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்தது திமுக வெற்றிக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்’ என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ் மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும், தனது வாயால் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் தாய் கழகத்துக்கு வந்ததைப் போல உணர்கிறேன் என்று சொன்னது தாய்மையை கொச்சைப்படுத்துவதாக தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் எந்த கட்சியை எதிர்த்தாரோ, எந்த கட்சி ஒரு பெண் என்றும் பாராமல் அவரை சட்டமன்றத்தில் மிக மோசமாக நடத்தினார்களோ அந்த கட்சிக்கு சென்று தன்னை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் தாய் கழகம் இணைந்ததைப் போல உணர்கிறேன் என்று சொன்னால் அது தமிழகத்தில் உள்ள யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
இன்னும் சொல்லப்போனால் திமுக எந்த அளவில் தோல்வி பயத்தில் இருக்கிறது என்றால், இவர்களைப் போன்றவர்களை சேர்த்துக்கொண்டு அவர்கள் தான் திமுகவிற்கு மிகப்பெரிய பலம் என்று ஸ்டாலின் சொல்கிறார் என்றால் திமுகவின் பரிதாப நிலையை தான் எண்ண வேண்டி இருக்கிறது. ஓபிஎஸ் திமுகவின் சேர்க்கை திமுக வெற்றிக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்’ எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீடுபுகுந்து கல்லூரி மாணவிக்கு வெட்டு: கஞ்சா போதை இளைஞர் கைது; இருவருக்கு வலை!
புதன் 15, ஏப்ரல் 2026 5:19:42 PM (IST)

விதிகளை மீறி திமுகவினர் ரூ.8,000 கூப்பன் விநியோகம் : தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!
புதன் 15, ஏப்ரல் 2026 5:11:00 PM (IST)

திமுகவின் 8000 ரூபாய் கூப்பன் மோசடியால் இளம்பெண் தற்கொலை: விஜய் குற்றச்சாட்டு!
புதன் 15, ஏப்ரல் 2026 4:53:13 PM (IST)

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)

குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வளத் துறையினர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 3:43:00 PM (IST)






