» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாளையங்கோட்டையில் ரூ.5.06 கோடியில் மரபணு ஆய்வகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சனி 14, பிப்ரவரி 2026 12:18:28 PM (IST)



பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகில் உள்ள வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ.5.06 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மரபணு ஆய்வகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, வட்டார தடைய அறிவியல் ஆய்வகத்தின் புதிய மரபணு ஆய்வகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, பணிகளை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் 2023-2024-ஆம் ஆண்டின் அறிவிப்பின்படி திருநெல்வேலி வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தல் புதிய மரபணு ஆய்வகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியம் மூலமாக ரூ.5.06 கோடி மதிப்பில் நீதிமன்றம் அருகில் புதிய மரபணு ஆய்வகம் பணிகள் 13.03.2024 அன்று துவங்கப்பட்டு, இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.

இப்புதிய மரபணு ஆய்வகத்தில் 3940 சதுர அடியில் தரைதளமும், 3979 சதுர அடியில் முதல் தளமும், முன்புற மண்டபம் 508 சதுர அடியும், படிக்கட்டு மேல் அறை 432 சதுர அடி என மொத்தம் 8859 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. மேலும், லிப்ட் வசதி, முழுமையாக குளிரூட்டப்பட்ட அலுவலக மற்றும் ஆய்வக அறைகள், தீ பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு அமைப்புகள், சூரிய மின்சார உற்பத்தி மற்றும் பயன்பாட்டு வசதி, ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்தனி கழிப்பறை வசதிகள், மின்சாரம் வசதி, சி.சி.டி.வி கேமரா, கணினி வலையமைப்பு வசதிகள், இன்டர்காம் தொடர்பு வசதி, அலங்கார பொய்க்கூரை (False Ceiling) அமைப்பு, குளிர் சேமிப்பு அறை வசதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ஆய்வகம் கட்டப்பட்டள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையாளர்கள் வினோத் குமார் சாந்தாராம் (கிழக்கு), விஜயகுமார் (தலைமையிடம்), கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தலைவர் .விஜிலா சத்தியானந்த், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், வட்டார தடய அறிவியல் ஆய்வகம் துணை இயக்குநர் என்.பாலமுருகன், இணை இயக்குநர் .கலாலெட்சுமி, சட்டம் சார்ந்த மரபணு பேராசிரியர் செல்வமுருகன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory