» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாட்டில் என்ன நடக்கிறது என்றே விஜய்க்கு தெரியவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி!
புதன் 4, பிப்ரவரி 2026 3:43:19 PM (IST)
ஊழல் வழக்கில் சிறை சென்ற செங்கோட்டையனை அருகில் வைத்துக் கொண்டு ஊழல் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார். நாட்டில் என்ன நடக்கிறது என்றே அவருக்கு தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலை தொங்கி காட்சியளித்து கொண்டிருப்பதாக விமர்சித்தார். மேலும் அவர் கூறுகையில், 2 மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.க. கூட்டணி குறித்து பலரும் கிண்டல் செய்தனர். தற்போது தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை வகிக்கும்.
நாட்டை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அதிமுகவும் தேசிய அளவிலான கட்சி. கரூர் சம்பவம் நடந்து 75 நாட்கள் கடந்து வீட்டை விட்டு வெளியே வந்தவர் விஜய். நாட்டில் என்ன நடக்கிறது என்றே த.வெ.க. தலைவர் விஜய்க்கு தெரியவில்லை. பொதுவெளியில் வந்தால் தான் நாட்டில் என்ன நடக்கிறது என தெரியும்.
அ.தி.மு.க. ஆட்சியை எப்படி ஊழல் ஆட்சி என விஜய் கூற முடியும்? விஜய் மக்களையும் பார்க்கவில்லை, தொலைக்காட்சியையும் பார்க்கவில்லை. விஜய் நேரில் செய்தியாளர்களை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும், அப்போதுதான் தமிழ்நாட்டில் உண்மை நிலவரம் அவருக்கு தெரியும். ஊழல் வழக்கில் சிறை சென்ற செங்கோட்டையனை அருகில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து விஜய் பேசுகிறார்.
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் விவகாரம் என்பது முடிந்து போன கதை. சசிகலா விவகாரம் குறித்து ஏற்கனவே பலமுறை தெளிவுப்படுத்தி விட்டேன். ஜெயலலிதாவின் ஆன்மா துரத்தியதால் தான் மனோஜ் பாண்டியன் தி.மு.க.விற்கு சென்று விட்டார். எங்கள் மீது குறை கூற ஒன்றும் இல்லை, எந்த தவறும் செய்யாத அதிமுக மீது குறைகளை முதல்வர் தேடிக்கொண்டிருக்கிறார். பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வர் என மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
மக்கள் கருத்து
MGR table Fans அவர்களேFeb 6, 2026 - 09:52:53 PM | Posted IP 162.1*****
என்னது? ஜெயலலிதா வீட்டு வேலைக்காரி காலில் விழுந்து பதவிக்கு ஆசைப்பட்ட எட்டப்பாடி பல் இளிச்சான் சாமி யா?, ஜெயலலிதா உயிரோடு இருந்தால் எட்டப்பாடி இன்னும் டம்மி பீச் தான். விஜய் வந்தால் வயித்தெரிச்சல் ஆ ?
MGR table Fans அவர்களேFeb 6, 2026 - 09:52:51 PM | Posted IP 104.2*****
என்னது? ஜெயலலிதா வீட்டு வேலைக்காரி காலில் விழுந்து பதவிக்கு ஆசைப்பட்ட எட்டப்பாடி பல் இளிச்சான் சாமி யா?, ஜெயலலிதா உயிரோடு இருந்தால் எட்டப்பாடி இன்னும் டம்மி பீச் தான். விஜய் வந்தால் வயித்தெரிச்சல் ஆ ?
MGR FANSFeb 6, 2026 - 03:37:29 PM | Posted IP 104.2*****
விஜய் ஒரு டம்மி பீஸ், நீங்க அனுபவமிக்க அரசியல்வாதி , விஜய் பற்றி பேசி உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
ஆமாFeb 5, 2026 - 09:08:13 AM | Posted IP 104.2*****
இவரே ஊழல்வாதிகளை உருவாக்கி விட்டு பிற கட்சிக்கு சேர அனுப்பிவிடுவார், அதானே பலே 10 ரூபாய் திருடன் செந்தில் பாலாஜி ஐ திமுகவில், பல கோடி ஊழல் செய்த செங்கோட்டையனை தவக வில்.
balaFeb 4, 2026 - 03:54:24 PM | Posted IP 172.7*****
அவனுக்கு அவன் கட்சியில் என்ன நடக்குதுனே தெரியாது.. தற்குறி..
மேலும் தொடரும் செய்திகள்

த.வெ.க. அமைச்சர்கள் கமிஷன் வாங்க ஆரம்பித்துவிட்டனர் : அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:39:13 AM (IST)

திருமண ஆசை காட்டிப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : வழக்கறிஞர் கேரளாவில் கைது!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:37:34 AM (IST)

என்ரிகா நிறுவனத்தின் 11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்: டாஸ்மாக் உத்தரவு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 11:05:39 AM (IST)

லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:20:57 AM (IST)

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)










MGR table Fans அவர்களேFeb 6, 2026 - 09:52:53 PM | Posted IP 162.1*****