» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜா சிகிச்சை: முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

திங்கள் 2, பிப்ரவரி 2026 10:19:04 AM (IST)


சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். 

சென்னை: பாஜக மூத்த தலை​வரும், தேசிய செயற்​குழு உறுப்​பினரு​மான ஹெச்​.​ராஜா (68), கடந்த 30-ம் தேதி சென்​னை​யில் நடந்த தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்சி பங்​கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்​தார்.உடனடியாக அரு​கில் உள்ள தனி​யார் மருத்​துவமனை​யில் சேர்க்​கப்​பட்ட அவர், பின்​னர் மேல் சிகிச்​சைக்​காக அப்​போலோ மருத்​துவமனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அவருக்கு பக்​க​வாத பாதிப்பு ஏற்​பட்​டது பரிசோதனை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்​பட்டு வரு​கிறது. குடும்​பத்​தினர், நண்​பர்களுடன் பேசக்​கூடிய வகை​யில் அவர் நலமுடன் இருப்​ப​தாக மருத்​து​வ​மனை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், மருத்​து​வ​மனைக்கு நேற்று வந்த முதல்வர் ஸ்டா​லின், அங்கு சிகிச்சை பெற்று வரும் ஹெச்​.​ராஜா​வின் உடல்​நலம் குறித்து அவரது குடும்​பத்​தினரிடம் கேட்​டறிந்தார்.அப்​போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் உடன் இருந்​தார். தொடர்ந்​து, அதே மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரும் குளித்​தலை திமுக எம்​எல்ஏ ஆர்​.​மாணிக்​கத்தையும் சந்​தித்து உடல்​நலம் குறித்து முதல்வர் கேட்​டறிந்​தார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory