» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனைவரது வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, நலம், வளம் பெருகட்டும்: தமிழிசை பொங்கல் வாழ்த்து!

புதன் 14, ஜனவரி 2026 12:16:48 PM (IST)

பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும் என்று  பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: உலகத் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் பண்பாட்டின் அடையாளமான பொங்கல் விழா இயற்கையையும், உழவுத் தொழிலையும் போற்றும் பொங்கல் விழா, தமிழரின் மாண்பையும் கலைகளையும் பெருமைப்படுத்தும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

நலிவடைந்த மண்பாண்ட தொழிலாளர்களைை பாதுகாக்கும் வகையில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்த விஸ்வகர்மா நிதி உதவி திட்டம்.மண்பாண்டத் தொழிலாளர்களை நாமும் ஆதரித்து பொங்கலுக்கு மண்ணால் செய்யப்பட்ட பானை,அடுப்பு வாங்கி பாரதப் பிரதமரின் விருப்பப்படி சுயசார்பான இந்தியாவை உருவாக்குவோம்.

பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

போகி நாளன்று தீய சக்திகளை கொளுத்துவோம்...

டயர்கள் கொளுத்துவதைத் தவிர்ப்போம்...

சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்...

தங்கட்டும் மகிழ்ச்சி...

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory