» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:12:56 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஜன.5 வரை வரவேற்கப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த) பணியிடம் ஒன்று முற்றிலும் தற்காலிக ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 05.01.2026 வரை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த)
மாத தொகுப்பூதியம் :ரூ. 27,804/-
பணியிட எண்ணிக்கை : 1
பணிபுரியும் இடம் : கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
கல்வித் தகுதி : சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் வளர்ச்சி / மனித உரிமைகள் பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் /சமுதாய வள மேலாண்மை இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தின் மூலம் வழங்கப்பட்ட முதுகலைப்பட்டம்
அல்லது சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் வளர்ச்சி / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் இளநிலை பட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உளவியல்/ மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம்/ சமுதாய வள மேலாண்மை ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தின் மூலம் வழங்கப்பட்ட இளங்கலைப்பட்டம் மற்றும் திட்டம் உருவாக்குதல் மற்றும் செயலாக்கம், அனுபவம், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 ஆண்டுகள் அனுபவம் சமூக நலன் மற்றும் பெண்கள் மற்றும் வளர்ச்சி துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
மேலும் கணிணி அறிவு உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
01.10.2025 அன்று 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
மாதிரி விண்ணப்ப படிவம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக வலைதளத்தில் (www.kanniyakumari.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலம். மேற்கண்ட பதவிக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து புகைப்படத்துடன் (Pass Port Size) கூடிய விண்ணப்பம் 05.01.2026 அன்று மாலை 5.30 ற்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முழுமையாக பூர்த்தி செய்யபடாத விண்ணப்பம் மற்றும் குறிப்பிட்ட காலகெடுக்குள் வந்து சேராத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கேட்டுக்கொள்கிறார்கள்.
முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
3-வது தளம், இணைப்பு கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலம்,
நாகர்கோவில் -629001
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










