» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!

செவ்வாய் 16, டிசம்பர் 2025 3:21:08 PM (IST)



கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி பேரூராட்சிகள் மற்றும் தர்மபுரம் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (15.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம், விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அறிவித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொண்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிறப்புப் பழுது பார்த்தல் பணிகள் 2025 - 2026 ன் கீழ் அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி பேரூராட்சிகளுக்குட்பட்ட பூதப்பாண்டி கிராமச் சாலை கி.மீ. 0/0 - 0/4 முடிய சிறப்புப் பழுது பார்த்தல் பணி ரூ.15.00 இலட்சம் மதிப்பீடு மற்றும் பூதப்பாண்டி கிராமச் சாலை கி.மீ. 0/4-1/2 முடிய சிறப்புப் பழுது பார்த்தல் பணி ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது.

மேலும் ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டம் (சி.ஆர்.ஐ.டி.பி.) 2025 -2026 ன் கீழ் தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட கோட்டார் - தர்மபுரம் சாலை கி.மீ. 0/0 2/0 முடிய ஓடுதளம் மேம்பாடு செய்தல் பணி ரூ.92.00 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடவும் உரிய சாலை பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவ துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சாலை பணிக்கு தேவையான பொருட்களை நவீன முறையில் கலக்கும் இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory