» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்

வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளுக்கான டிச.13, 14ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில், 01.01.2026 - ஆம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தினை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான கணக்கெடுப்பு காலத்தின் கடைசி தேதியினை 14.12.2025 வரை கால நீடிப்பு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

வாக்காளர்கள் பட்டியலில் இதுவரை இடம்பெறாத இந்திய குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட படிவம் 6 -ல் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்த்திட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. 

 மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள இணையதள முகவரியான voters.eci.gov.in- மூலம் படிவம் 6 -இல் விண்ணப்பம் செய்தும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். மேற்படி முகாம் நடைபெறும் நாட்களில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான படிவம் 6-னை வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் இருந்து பெற்றோ இணையதளம் மூலமாகவோ உடனடியாக பூர்த்தி செய்து அளித்து முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory