» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு

சனி 9, ஆகஸ்ட் 2025 4:16:16 PM (IST)



கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்” திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்” திட்டத்தினை கடந்த 02.08.2025 அன்று தொடங்கி வைத்துள்ளார்கள்.

அதனடிப்படையில், திசையன்விளையில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் 1401 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 53 நபர்களுக்கு கர்ப்பபை நோய், இருதய நோய், கண் அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு நோய்கள் கண்டறியப்பட்டு, உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இரண்டாம் நாளாக கல்லிடைக்குறிச்சியில் "நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்” நடைபெறுகிறது. 1962 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாமில் அடிப்படை சிகிச்சை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் பரிசோதனைகளும் (உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் முழுமையான இரத்தப்பரிசோதனை, காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறிதல் பரிசோதனைகளும், ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் போன்ற அனைத்து பரிசோதனைகளும் கண்டறியப்படும்) மேலும் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, இதயவியல், மகப்பேறு மருத்துவம் எலும்பு மற்றும் நரம்பியல், மனநலம், நுரையீரல், தோல் நோய், காது மூக்கு தொண்டை மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் இயன்முறை சிகிச்சை ஆகிய சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

மேற்கண்ட பரிசோதனைகள் மட்டுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத்திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் போன்ற சேவைகள் இம்முகாமில் வழங்கப்படுகிறது. மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரமும் சரியாக உண்ணுங்கள் இயக்கம் மூலம் அறிவுரைகள் வழங்கப்படும்.

மேலும் 30 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மன நல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் இம்முகாமில் பயனடையலாம்.

ஒவ்வோரு சனிக்கிழமையும் திருநெல்வேலி மாவட்டத்தில் 30 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்குகிறார்கள். பொது மக்கள் அனைவரும் இம்முாகமில் கலந்து கொண்டு அனைத்து சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அறிவுரைகள் பெற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் இணை இயக்குநர் மருத்துவம் லதா, மாவட்ட சுகாதார அலுவலர் வேல்முருகன் கணேஷ், வட்டார மருத்துவர் ரமேஷ், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சித்தலைவர் பார்வதி, துணைத் தலைவர் இசக்கிபாண்டி, பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுந்தர் உட்பட மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory