» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புத்தேரி நான்கு வழி சாலைப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 5:31:36 PM (IST)



புத்தேரி நான்கு வழி சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- பொதுமக்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து நாகர்கோவிலுக்கு வரும்போது, நாளுக்குநாள் வாகன நெரிசல் ஏற்படுவதாலும், தொலை தூரங்களுக்கு செல்ல சுற்றுப்பாதையினை பயன்படுத்துவதாலும், பயணத்தின் நேரம் அதிகமாகிறது. 

இதனால் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நெரிசல்களை குறைத்திடும் வகையில் நான்கு வழிச்சாலை பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக புத்தேரி வழித்தடத்தின் 4-வழிப்பாதையின் ஒரு பகுதியாக புத்தேரி குளத்தின் குறுக்கே ஒரு பெரிய பாலம் (வில் நாண் வகை) முன்மொழியப்பட்டுள்ளதாகவும், 500 மீட்டர் (0.5 கிமீ) நீளம் கொண்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டுமானப் பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இத்திட்ட செயல்பாட்டை பாதிக்கும் சிக்கல்கள் மற்றும் தடைகள் உள்ளனவா என துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டதோடு, அவற்றினை நிவர்த்தி செய்து கட்டுமான பணிகளை தொடர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார். ஆய்வில் தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலர் வேல் ராஜ், உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணிய சிவா, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory