» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!

வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)



உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தலைமையில் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (20.06.2025) "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் வரும் ஜூலை 2-ஆம் வாரத்தில் நடைபெறுவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் குறைகளைத்தீர்க்க அவர்களின் பகுதியிலேயே நேரடியாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை வரும் ஜூலை 2-ஆம் வாரத்தில் துவக்கி வைக்கவுள்ளார்கள். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஏழை, எளிய மக்களின் வசதிக்கேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகாமையிலேயே தங்கள் குறைகளையும், கோரிக்கை மனுக்களையும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துனற, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல் துறை, மின்சாரத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, மீன்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தொழிலாளர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை, மாவட்ட தொழில்மையம், கால்நடை பராமரிப்புத்துறை, அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியம், மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட அரசு மற்றும் அரசு துறை சார்ந்த சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. நகர்பகுதிகளில் 13 அரசுத்துறைகளின் 43 சேவைகளும், கிராமப்பகுதிகளில் 14 அரசு துறைகளின் 46 சேவைகள் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகர பகுதிகளில் 38 இடங்களிலும், நகர்புறங்களில் 29 இடங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் 34 இடங்களிலும், ஊரக பகுதிகளில் 154 இடங்களிலும் என மொத்தம் 255 இடங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முகாம்களில் பட்டா பெயர் மாற்றம், பட்டா திருத்தம், இ-பட்டா தொடர்பான விண்ணப்பங்கள், தாட்கோ மூலம் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள், கல்வி உதவித்தொகை, ரேசன்கார்டு பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதியது தொடர்பான விண்ணப்பங்கள், மின்சார இணைப்பு மாற்றம், பெயர் திருத்தம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, ஆதார் பெயர் மாற்றம், புதுப்பித்தல், விண்ணப்பத்தல் தொடர்பான விண்ணப்பங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சொத்துவரி பெயர் மாற்றம், கட்டிட ஒப்புதல், ஓய்வூதியம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், மாற்றுத்திறனாளிகள் உதவி விண்ணப்பங்கள், கால்நடை, கோழி வளர்ப்பு, புதிய வீட்டுவரி, வீட்டுவரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான மனுக்கள் பெறப்படவுள்ளது.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் விடுபட்ட மகளிர் இந்த முகாம்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். இம்முகாம்களில் கலந்து கொள்ளவுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை துறைசார்ந்த அலுவலர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

இம்முகாம் சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்துத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் இணைந்து செயல்பட வேண்டும். இம்முகாமிற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம், கழிப்பறை, தடையில்லா மின்சாரம், போக்குவரத்துவசதி, வாகனங்களை சீர்செய்தல் உள்ளிட்ட வசதிகளை துறைசார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா , சமூக பாதுகாப்புத்திட்டம் தனித்துணை ஆட்சியர் ஜெயா , மகளிர்திட்டம் திட்ட இயக்குநர் இலக்குவன் , உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முகமது ஷபி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory