» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கைலாசா நாடு எங்குள்ளது? உயர்நீதிமன்றம் கேள்விக்கு நிதியானந்தாவின் சீடர் பதில்
வியாழன் 19, ஜூன் 2025 5:30:04 PM (IST)
ஆஸ்திரேலியா அருகே கைலாசா உள்ளதாகவும், அந்நாட்டிற்கு ஐ.நா. சபை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் உயர்நீதிமன்றம் கேள்விக்கு நிதியானந்தாவின் சீடர் பதிலளித்தார்.
மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடுத்து, நித்யானந்தா மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.அதாவது, கைலாஷா நாடு எங்கு உள்ளது, அங்கு எப்படி செல்வது, நித்யானந்தா எங்கு உள்ளார், கைலாஷா நாட்டுக்கு செல்வதற்கு விசா, பாஸ்போர்ட் வேண்டுமா உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.இதற்கு நித்யானந்தாவின் தரப்பில் ஆஜரான அவரது சீடர் அரச்சனா, ஆஸ்திரேலியா அருகே யுஎஸ்கே என்கிற கைலாசா ஐக்கிய நாடு என்ற தனி நாட்டில் நித்யானந்தா வசித்து வருவதாக கூறினார். மேலும், இந்த நாடு ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு எனக் கூறிய அவர், நித்யானந்தா தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதி கோரினார். இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை, வழக்கை ஒத்திவைத்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










