» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கத்திப்பாரா மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

வியாழன் 19, ஜூன் 2025 4:50:07 PM (IST)

கத்திப்பாரா மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இன்ஜினீயரிங் மார்வெல் என அனைவரும் வியக்க உருவாகி வரும் கத்திப்பாரா மேம்பாலம் உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, கிண்டி கத்திப்பாரா பகுதியில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "சென்னையின் நவீன அடையாளமாக கத்திப்பாரா மேம்பாலத்தை அமைத்தார் மறைந்த முதல்வர் கலைஞர். அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன். Engineering Marvel என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்,” என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory