» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாகை நாயகர் பெரும்பிடுகு முத்தரையர்: விஜய் புகழாரம்
வெள்ளி 23, மே 2025 11:47:43 AM (IST)

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவை போற்றுவோம் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள். அக்காலத்தில், தன்னுடைய போர்த்திற வெற்றியைத் தன்னம்பிக்கையுடன் உறுதி செய்து, போருக்குச் செல்லும் முன்பே வாகை மலர் சூடிச் சென்றவர், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர்.
தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாகை நாயகர். அரசர்களுக்கு எல்லாம் பேரரசராகத் திகழ்ந்த அரச வாகை கொண்ட பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாளில், தமிழ் மண்ணுக்கும் தமிழர் உரிமைக்கும் அவர் ஆற்றிய சேவைகளைப் போற்றி மகிழ்வோம்' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










