» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவனந்தபுரத்தில் பஸ் மோதி குமரி மாவட்ட பெண் பலி: கணவரின் சிகிச்சைக்காக வந்தபோது சோகம்!

வியாழன் 15, மே 2025 12:06:34 PM (IST)

திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் பரபெட் சுவருக்கும் பேருந்துக்கும் இடையில் சிக்கி படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்தவர் முஹம்மது ரஃபிக் என்பவரின் மனைவி நபீசத் (48). இவர் நேற்று காலை 11.30 மணியளவில் நபீசத் பேருந்திலிருந்து இறங்கி வெளியே செல்ல முயற்சி செய்தபோது, இன்னொரு பேருந்து அருகில் வருவதை பார்த்து பரபெட் சுவரை அருகே ஒதுங்கி நின்றார். ஆனால் அந்த பேருந்து நெருக்கமாக வந்ததால், அவர் சுவருக்கும் பேருந்துக்கும் இடையில் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நபீசத்தின் கணவர் புற்றுநோய் நோயாளி. அவரது கீமோதெரபி சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்கவே திருவனந்தபுரத்திற்கு வந்திருந்தார். தம்பானூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நபீசத்தின் உடல் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அப்சல், ஷஹினா மற்றும் ஃபாசில் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory