» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்: திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்!
திங்கள் 5, மே 2025 12:45:01 PM (IST)
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி தற்போது வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுத்து வருகிறார். இறுதியாக, இவர் நடித்த ஒத்த ஓட்டு முத்தையா கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், திரைப்பட நிகழ்வுகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்தே வருகிறார்.இந்நிலையில், கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள கவுண்டமணியின் இல்லத்தில் இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்துவருபவர் கவுண்டமணி. அவர் மனைவியின் மறைவுக்குத் திரைத்துறையினர், ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










