» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்

ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே  நாளை மே 5ந் தேதி திங்கள்கிழமை முதல் 31ந் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே மே 5-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை (புதன், வியாழன் தவிர) முன்பதிவில்லா சிறப்பு ரயில் வண்டி எண் 06322 இயக்கப்படுகிறது. திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.45 மணிக்குப் புறப் படும் இந்த ரயிலானது இரவு 9.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது அம்பாத்துரை, கொடை ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சிமணியாச்சி, நாரைக்கிணறு, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ரயில்வே பராமரிப்புப் பணி கள் காரணமாக, கோவை - நாகர் கோவில் ரயில் (16322) பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏற்படும் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory