» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:35:26 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் சுகுமார், ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி தொடங்கி வைத்தார்.
ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆர் வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோயால் கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல், மூக்கிலிருந்து சளி வடிதல், தீனி உட்கொள்ளாமை மற்றும் இறுதியாக இறப்பு ஏற்படுகிறது. இந்நோயினை தடுக்க 4 மாதங்களுக்கு மேல் வயதுடைய வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியினை பெற இயலும்.
அதிக காய்ச்சல், 3 முதல் 5 நாட்கள் நீடிக்கும், சோர்வு, தீனி உட்கொள்ளாத தன்மை, மூக்கிலிருந்த சளி வடிந்து உறைந்து இருத்தல் கண்களில் புரை தள்ளுதல், வாயின் உட்புறங்கள் ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீர் சுரத்தல் ஆகியவை ஆட்டுக்கொல்லி நோய் அறிகுறிகளாகும். நோய் வராமல் இருக்க செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளுக்கு குறிப்பாக 4 மாதத்திற்கு மேல் வயதுடைய ஆடுகளுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போடப்பட வேண்டும்.
இன்று ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணியினை திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை குலவணிகர்புரம் அம்மன் கோவில் திடலில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் மரு.சுகுமார் தொடங்கி வைத்து ஆடுகளுக்கு தடுப்பூசியினை செலுத்தினார்.
இன்று நடைபெற்ற முகாமில் 200 வெள்ளாடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் கால்நடை வளர்ப்போர்களுக்கு கால்நடைகளுக்கு தேவையான தாது உப்புகளும் வழங்கப்பட்டது. ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசிப்போடும் முகாம் இன்று 28.04.2025 முதல் 27.05.2025 முடிய நடைபெறவுள்ளது மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 500 வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு தடுப்பூசிப் பணி மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே ஆடு வளர்ப்போர் தங்களது ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சங்கரநாராயணன், துணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி, உதவி இயக்குநர்கள் சுமதி, ஆபிரகாம் ஜாப்ரி, ரஹ்மத்துல்லாஹ், தங்கராஜ், முதன்மை மருத்துவர் க.முருகன் மற்றும் கால்நடை நோய் புலனாய்ப்பிரிவு உதவி இயக்குனர் பி.முருகன் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அமுதா சுந்தர் , கால்நடை உதவி மருத்துவர்கள் சிவராமகிருஷ்ணன், தமிழரசன், சரண்யா, கோகுல், கால்நடை ஆய்வாளர்கள் ரமேஷ், பேச்சியம்மாள், சுடலைமுத்து மற்றும் உதவியாளர்கள் கஸ்தூரி, அருள்மாரி செல்வி, லட்சுமணன், பாருக் அலி, சேது ,வகாபுதீன் சுடலைமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










