» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திங்கள் 28, ஏப்ரல் 2025 10:42:45 AM (IST)
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.முதல்வர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை இன்று திங்கள்கிழமை கூடியதும் விதி எண் 110இன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
அரசு ஊழியர்களுககு பண்டிகை கால முன்பணம் ரூ.10,000இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும்.
பொங்கல் போனஸ் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியம் ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
பழைய ஓய்வுதியம் திட்டம் தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும்.
அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் கலை, அறிவியல் கல்லூரி பயில ரூ.50,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி வழங்கப்படும்
அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பலன் பெறும் நடைமுறை அக்டோபரிலேயே அமல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)











vijayanandமே 7, 2025 - 12:50:58 PM | Posted IP 162.1*****