» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து நெல்லையில் பாகிஸ்தான் கொடி எரிப்பு!

வியாழன் 24, ஏப்ரல் 2025 5:48:53 PM (IST)

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து நெல்லையில் பாகிஸ்தான் கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தளமான பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த பயங்கரவாத செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த பயங்கரவாத செயலைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டம், அம்பை கீழரதவீதியில் வஜ்ரசேனா என்ற அமைப்பினர் நேற்று நள்ளிரவில் திடீரென பாகிஸ்தான் கொடியை தீயிட்டு எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory