» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவடுக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 12:51:37 PM (IST)
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் அரசு முடிவு எடுக்கும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? அது எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பினார்.இது குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது; அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதாகக் கூறினார். அரசு ஊழியர்களுடைய நலனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்.
அந்த வகையில் ஊழியர்களுடைய கோரிக்கைகள் அரசு மிகுந்த கவனத்தோடு பரிசிலீத்து வருகிறது. நிதிநிலை அறிக்கையில் கூட அரசு ஊழியர்களுக்கான தேவையான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன். தொடர்ந்து அவர்களுக்கு கோரிக்கைகள் இருந்து வருகின்றன. பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவுக்கான கால வரையறைகள் தரப்பட்டிருக்கிறது. அந்த குழுவை பொறுத்தவரை பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதனை முதலமைச்சரிடம் கலந்து பேசி கோரிக்கைகளை அரசு மிகுந்த கவனத்தில் எடுத்து கொண்டு உள்ளது. அவர்கள் கேட்டிருக்க கூடிய கோரிக்கைகளை குழுவிடம் விவாதித்து உரிய நேரத்தில் சரியான முடிவை அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
XxxxxApr 26, 2025 - 10:37:46 PM | Posted IP 162.1*****
வடை சுடும் போட்டியில் வெற்றி பெறுவது அன்பில் பொய் மொழியா? அல்லது கவரிங் தென்னரசு வா? கடும் போட்டி
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)











தீமுகApr 29, 2025 - 06:01:36 AM | Posted IP 104.2*****