» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுலா பகுதிகளில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:36:28 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு உட்பட்ட சுற்றுலா பகுதிகளில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட 28 பொருட்களின் விவரங்கள்: தண்ணீர்/சாறுகளை உட்கொள்ளப் பயன்படுத்தப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்களுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள்/கிளிங் ஃபிலிம், சாப்பாட்டு மேசைகளில் பரப்பப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் கோப்பைகள், பிளாஸ்டிக் தேநீர் கோப்பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் தெர்மோகோல் கப் ஆகியவை அடங்கும்.

பிளாஸ்டிக் பூசப்பட்ட கேரி பேக்குகள், நெய்யப்படாத கேரி பேக்குகள், தண்ணீர் பைகள்/பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், அனைத்து அளவுகள் மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கேரி பைகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய்கள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட ஐஸ்கிரீம் மற்றும் அலங்காரங்களுக்கான பாலிஸ்டிரீன் ஆகியவையும் உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டன.

அந்த உத்தரவின் அடிப்படையில் களக்காடு சரணாலயம் களக்காடு தலையணை சுற்றுலா பகுதிகளிலும் மேற்சொன்ன 28 வகையான பிளாஸ்டிகளுக்கு தடை விதித்து துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.எனவே களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதிக்கு வருகை புரியும் பொதுமக்கள் மேற் சொன்ன 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலா தலமான களக்காடு தலையணை பகுதிக்குள் பயன்படுத்துவதை தவிர்த்து வனத்துறை நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு களக்காடு வனச்சரக அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory