» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் குழப்பம்: கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு!
திங்கள் 21, ஏப்ரல் 2025 5:37:34 PM (IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமூக அறிவியல் வினாத்தாளில் குழப்பம் காரணமாக கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமாா் 80-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பணிகளில் சுமாா் 95 ஆயிரம் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
இந்தநிலையில், சமூக அறிவியல் பாட தேர்வில் ‘ஒரு மதிப்பெண் பிரிவில்’ கேட்கப்பட்டதொரு கேள்வியில், மாணவர்கள் பொருளை சரியாக புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு குழப்பமாக இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த கேள்விக்கு மாணவர்கள் எந்த பதிலை எழுதியிருந்தாலும் ஒரு மதிப்பெண் வழங்கிட ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் மே 19-இல் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










