» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:26:23 PM (IST)
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் செய்திகளை கொடுக்கிறார் ஒருவர். கட்சி மற்றும் தலைமைக்கு தீரா பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் பணியாற்ற விரும்பவில்லை. என்னால் இயக்கத்துக்கோ, தலைவருக்கோ எள் முனை கூட சேதாரம் வந்துவிடக்கூடாது என இந்த முடிவை எடுத்துள்ளேன்.கடந்த 7 ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கட்சியினர் தொடர வேண்டும். ஏப்ரல் 20 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெரும் மதிமுக நிர்வாகக்குழுவில் மல்லை சத்யா தனிமைப்படுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தொலைகாட்சி செய்தியை பார்த்துதான் துரை வைகோவின் விலகலை அறிகிறேன். கட்சி பொறுப்பில் இருந்து விலகும் துரை வைகோ முடிவு அதிர்ச்சி அளிக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










