» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காவல் துறையினருக்கு வார விடுமுறை அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
சனி 19, ஏப்ரல் 2025 11:49:58 AM (IST)
தமிழக காவல் துறையில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஆஸ்டின்பட்டியைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: "தமிழக காவல் துறையில் பணிபுரிபவர்கள் அதிக பணிச்சுமையை சந்தித்து வருகின்றனர். காவலர்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியுள்ளது. இது தொடர்பாக ஏராளமான காவலர்கள் புகார் அளித்து வருகின்றனர்.
காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரையிலான பணியில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க 2021-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த அரசாணை முறையாக அமல்படுத்தப்படவில்லை. காவலர்கள் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணிபுரிய வேண்டியுள்ளது. இதன் காரணமாக காவலர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, தமிழக காவல் துறையில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்குவது தொடர்பாக, கடந்த 2021-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோயில் குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாது : உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 5:05:45 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

மத்திய பட்ஜெட்டை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு: பாஜகவினர் 23 பேர் கைது!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 11:51:28 AM (IST)

விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ. 1.50 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, பிப்ரவரி 2026 10:57:36 AM (IST)









