» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: மாணவ, மாணவியர்கள் முன்பதிவு செய்யலாம்!

வியாழன் 17, ஏப்ரல் 2025 3:08:01 PM (IST)

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் வருகிற 25ஆம் தேதி தொடங்க உள்ளது. 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவின் சார்பில் 21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் 25.04.2025 முதல் 15.05.2025 வரை அண்ணா விளையாட்டு அரங்கம் பாளையங்கோட்டையில் வைத்து நடைபெறவுள்ளது. 

இப்பயிற்சி முகாமில் தடகளம், (Athletic), கூடைப்பந்து, (Baskeball), கையூந்துபந்து, (Volleyball), வளைகோல்பந்து (Hockey), ஜிம்னாஸ்டிக் (Gymnastics), குத்துச்சண்டை (Boxing), ஆகிய விளையாட்டுக்களுக்கு 18 வயதிற்குட்பட்ட மாணவ / மாணவியர்களுக்கு NIS தகுதி வாய்ந்த சிறந்த அரசு பயிற்றுநர்களை கொண்டு காலை மற்றும் மாலை வேலைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. 

இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ / மாணவியர்கள் உடனடியாக முன்பதிவு செய்திட அண்ணா விளையாட்டரங்க அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும் விபரங்களுக்கு கூடைப்பந்து விளையாட்டிற்கு பழனி விக்னேஷ் 9486148055, வாலிபால் விளையாட்டிற்கு அருள்போஸ் 9488887989, ஹாக்கி விளையாட்டிற்கு ஹானஸ்ட் ராஜா 9994458320, ஜிம்னாஸ்டிக் விளையாட்டிற்கு ஆதவா 8428365332, தடகள விளையாட்டிற்கு மகேஷ்வரன் 9600347250, குத்துச்சண்டை விளையாட்டிற்கு ஷாம் எபினேசர் 9444464408 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory