» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அம்பேத்கர் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை: சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 14, ஏப்ரல் 2025 11:34:24 AM (IST)

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கா் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக அரசின் சாா்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றார்.
இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை எம்.சி. ராஜா கல்லூரி மாணவா் விடுதி வளாகத்தில் ரூ. 44 கோடியே 50 லட்சத்தில் தரை மற்றும் 10 தளங்களுடன் 484 மாணவா்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவா்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










