» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை முறையாக விசாரிக்க வேண்டும் : த.வெ.க. பொதுக்குழு தீர்மானம்

வெள்ளி 28, மார்ச் 2025 11:08:09 AM (IST)



தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்தி வருகிறார். கடந்த மாதம் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பிறகு மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

கூட்டம் தொடங்கியவுடன் விஜய் உள்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மேடையில் விஜய்யுடன் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் அமர்ந்துள்ளனர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளராக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒரு பெண் பிரதிநிதி என 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில், இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை, பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு கண்டனம் தெரிவித்தும், டாஸ்மாக் ஊழலை முறையாக விசாரிக்க வேண்டும், அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்றுவதற்கு கண்டனம், இலங்கை தமிழர் பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல், தவெக தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் வரை நடைபெறவுள்ள கூட்டத்தின் இறுதியில் கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital







New Shape Tailors



Thoothukudi Business Directory