» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை: அண்ணாமலை பேட்டி!
சனி 22, மார்ச் 2025 11:23:49 AM (IST)

"தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை; தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டம் ஒரு நாடகம்" என பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழக அரசை கண்டித்து தமிழக பா.ஜ.க.வினர் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை பனையூரில் உள்ள தனது இல்லத்தின் முன்பு நின்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கிவைத்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: யாருக்கும் பிரச்சனை ஏற்படுத்தாமல் வீட்டுக்கு வெளியே நின்று பா.ஜ.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் உரிமைகளை அண்டை மாநிலங்களுக்கு மு.க.ஸ்டாலின் விட்டுக்கொடுத்துவிட்டார். தமிழகத்திற்கு கேரளாவுடன் முல்லை பெரியாறு, பேபி அணை உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது. 4 முறை கேரளாவுக்கு சென்றபோதிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமுறை கூட மாநில பிரச்சனை குறித்து பேசவில்லை.
அணை கட்டியே தீருவேன் என டி.கே.சிவக்குமார் பேசியதற்கு தமிழக முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமையில்லை என கூறும் மு.க.ஸ்டாலின் தெலுங்கானா முதல்-மந்திரியிடம் கேட்கட்டும். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டம் ஒரு நாடகம். தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை. ஒரு சீட் கூட மத்திய அரசு குறைக்கப்போவதில்லை என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:56:05 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:24:38 PM (IST)
