» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் சீரமைப்பு பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 21, மார்ச் 2025 12:46:49 PM (IST)

தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக பகுதிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (20.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் 17ஆம் தேதி வரை கள்ளக் கடல் ஏற்பட்டதால் பிரதான அலை தடுப்புச்சுவர் சேதமடைந்தது.
சேதமடைந்த 75 மீட்டர் நீளமுள்ள பிரதான அலை தடுப்புச் சுவர் சீரமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் பணிகளின் முன்னேற்பாடு குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைத்து துறைமுக பாதுகாப்பையும், மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், உடனடியாக சீரமைப்பு பணிகளுக்கு விரைந்து ஒப்புதல் பெற்று பணிகளை மேற்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
ஆய்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன், உதவி இயக்குனர் அஜித் ஸ்டாலின், உதவி செயற்பொறியாளர் அரவிந்த் குமார், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:56:05 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:24:38 PM (IST)
