» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? - தமிழக வெற்றிக்கழகம் விளக்கம்
புதன் 19, மார்ச் 2025 10:29:04 AM (IST)
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு அக்கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக செயல்பட்டு வருபவர் ஆதவ் அர்ஜுனா. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா கடந்த ஜனவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.இதனிடையே, தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக இன்று சமூகவலைதளத்தில் தகவல்கள் பரவின. இதனால், தவெக வட்டாரத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படதாக வெளியான தகவலுக்கு தவெக மறுப்பு தெரிவித்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக பரவிய தகவல் வதந்தி என்றும், சமூகவலைதளத்தில் போலி செய்தி பரவி வருவதாகவும் தவெக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










