» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காவல் அதிகாரி ஜாகிர் உசேன் படுகொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி
செவ்வாய் 18, மார்ச் 2025 5:21:35 PM (IST)
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக பணியாற்றிய போது, அவரது பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியவர் ஜாகிர் உசேன். அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று நெல்லையில் வாழ்ந்து வந்தார். முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக பணியாற்றியவரையே வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜாகிர் உசேனின் வீட்டுக்கு அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்து வந்ததாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலருடன் ஏற்பட்ட பகை காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தாம் எந்த நேரமும் படுகொலை செய்யப்படலாம் என்றும் காணொலி மூலம் அச்சம் தெரிவித்திருந்த ஜாகிர் உசேன் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அவரது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 10:37:43 AM (IST)

அண்ணாமலையிடமிருந்து பதக்கம் பெறமறுத்த அமைச்சரின் மகன்: தமிழிசை கண்டனம்
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 10:08:44 AM (IST)

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியைகள் தேர்வு!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:37:36 AM (IST)

காதலன் கண்முன்னே இளம்பெண் தற்கொலை: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:34:40 AM (IST)

ஆவினில் 10 ரூபாய்க்கு பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட் அறிமுகம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 5:07:25 PM (IST)

ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீதம் இலக்கை எட்ட வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:44:41 PM (IST)
