» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தரமான பொருட்களை வாங்குவதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: ஆட்சியர்

செவ்வாய் 18, மார்ச் 2025 3:31:03 PM (IST)



தரமான பொருட்களை வாங்குவதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என திருநெல்வேலி மண்டல அளவிலான நுகர்வோர் உரிமைகள் தின விழாவை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் பேசினார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, தூய யோவான் கல்லூரியில் இன்று (18.03.2025) நடைபெற்ற மண்டல அளவிலான தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கலந்து கொண்டு பல்வேறு நுகர்வோர் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். மேலும், நியாயவிலைக் கடைகளில் சிறப்பாக பணிபுரிந்த சிறந்த விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: நாம் விலை கொடுத்து வாங்குகின்ற பொருட்கள் மற்றும் சேவையினை நாம் தரமான முறையில் முழு மன நிறைவுடன் பெறுகிறோமா என்பது குறித்தும், அந்த பொருளின் தரம் மற்றும் தன்மை குறித்து தெரிந்து கொள்வது தான் சிறந்த நுகர்வோராகும். அதிக விலைகொடுத்து வாங்குகின்ற பொருட்கள் அதன் உறுதிதன்மை மற்றும் நீடிப்பு தன்மை தெரிந்து கொண்டு பொருட்களை வாங்க வேண்டும்.

வளரும் தலைமுறையினர் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு ஆன்லைன் மூலம் வரும் விளம்பரங்களை முழுமையாக நம்ப வேண்டாம். நல்ல பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்களும் நல்ல விளம்பரங்கள் மூலம் டிஜிட்டல் உலகில் நாம் பார்க்கும் அனைத்து பொருட்களும் தரமானதாக இருப்பது போன்று தோற்றம் அளித்தாலும் அதுகுறித்து நன்றாக தெரிந்த பின்பே அதனை வாங்க வேண்டும்.

ஒவ்வொரு பொருளிலும் அதன் உற்பத்தியான நாள், காலாவதியாகும் நாள், நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் அந்த பொருளில் சேர்க்கப்படும் இதர பொருட்கள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பொருள் வாங்கும் போது முறையான ரசீது பெற்று வாங்க வேண்டும். இணையதளத்தில் ஒரு பொருளுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உள்ளன. தகவல்களை தெரிந்து கொண்டு பொருட்கள் வாங்க வேண்டும். நுகர்வோர்கள் தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப பொருட்களை தேர்வு செய்து வாங்க வேண்டும்.

டிஜிட்டல் முறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நுகர்வோர்களை கவரும் வகையில் தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்ய பல்வேறு போலி நிறுவனங்கள் செயல்படுகின்றன. நுகர்வோர்கள் அதனை நன்றாக தெரிந்து கொண்டு தரமான பொருட்களை வாங்குவதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.மு.முருகேசன், தமிழ்நாடு நுகர்போருள் வாணிப்பகழகம் முதுநிலை மண்டல மேலாளர் வே.காண்டீபன், பாளைங்கோட்டை தூய யோவான் கல்லூரி முதல்வர் ஆண்ட்ரூஸ், நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சலீம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சோ.பாக்கியலட்சுமி (திருநெல்வேலி), கு.உஷா (தூத்துக்குடி) தனி வட்டாட்சியர் (கு.பொ.வ.) ரா.ராதாகிருஷ்ணன் (பறக்கும்படை), தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) பிரபாகர் அருண் செல்வம் (திருநெல்வேலி), P.மாடசாமி (கூட்டுறவுத்துறை) உட்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory