» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன்
செவ்வாய் 18, மார்ச் 2025 12:14:04 PM (IST)
தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும்" என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டசபையில் கேள்வி, பதில் நேரத்தில், தாமிரபரணி நதி வற்றாத ஜீவ நதியாக உள்ளதாகவும், மழைக்காலங்களில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலக்கின்ற நிலையில், தாமிரபரணி ஆற்றில் 4, 5 இடங்களில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகன், "தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை மிக முக்கியமானது. நம்மிடம் இருக்கும் ஒரே வற்றாத நதி தாமிரபரணி தான். அத்தியாவசியமான கோரிக்கை உள்ள நிலையில் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும்" என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










