» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:35:02 AM (IST)

செண்பகராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சன்புதூர் குளத்தினை குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் செண்பகராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சன்புதூர் குளத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுப்பதை மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- முதலமைச்சர் உத்தரவின் படி பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள ஏரி குளங்களில் விவசாய நிலத்தை மேம்படுத்துதல், மண்பாண்டங்கள் செய்தல் மற்றும் இதர பயன்பாட்டிற்கு மண் எடுக்க தகுதி வாய்ந்த ஏரி, குளங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் இலவசமாக மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் விவசாய தேவைகளுக்காக ஒரு ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கனமீட்டரும் வண்டல் மண், களிமண், கிராவல் மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று செண்பகராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சன்புதூர் குளத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்கப்படுவது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, மண் உரிய அளவில் மட்டும் எடுத்து பயன்படுத்துமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என தெரிவித்தார். ஆய்வில் தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை : தினகரன் குற்றச்சாட்டு
செவ்வாய் 18, மார்ச் 2025 4:37:47 PM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:49:03 PM (IST)

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:40:59 PM (IST)

தரமான பொருட்களை வாங்குவதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: ஆட்சியர்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:31:03 PM (IST)

தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன்
செவ்வாய் 18, மார்ச் 2025 12:14:04 PM (IST)

கன்னியாகுமரியில் மும்பை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்
செவ்வாய் 18, மார்ச் 2025 11:49:32 AM (IST)
