» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவிலில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கம் : தெற்கு ரயில்வே தகவல்!

செவ்வாய் 18, மார்ச் 2025 11:03:29 AM (IST)



கேரளாவில் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 29 ந் தேதி நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. 

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட நெய்யாற்றின்கரா-பாரசாலா ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண்.16127 நாகர்கோவில் டவுன்-குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, நாகர்கோவில் டவுனில் நிறுத்தப்படும்.

மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து வரும் 29-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16128 குருவாயூர்-நாகர்கோவில் டவுன் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

இந்த ரயிலானது குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நாகர்கோவில் டவுனில் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் செல்கிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மங்களூரு சென்டிரலில் இருந்து மார்ச் 28-ந்தேதி காலை 5 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண் 16649 திருவனந்தபுரம் சென்டிரல்-கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவனந்தபுரம் சென்டிரலில் நிறுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory