» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வியாழன் 13, மார்ச் 2025 3:45:22 PM (IST)
குமரி மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு மத்திய அரசு ரூ.2000 கோடி ஒதுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்தார்.
இயற்கை எழில் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தை உலகின் தலை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிட மத்திய அரசு முன் வரவேண்டும். அதற்காக சிறப்பு நிதியாக ரூபாய் 2000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களவையில் 377 ஆம் விதியின் கீழ் இந்த முக்கியமான கோரிக்கையை வைத்த விஜய் வசந்த் : கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம். மிக தெளிவான கடற்கரைகள், விண்ணை எட்டி நிற்கும் மலைகள், அருவிகள், நீர் நிலைகள் என்று கண் கவர் இயற்கை எழிலை கொண்டது எங்கள் மாவட்டம். விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை போன்ற உலக புகழ் வாய்ந்த சுற்றுலா மையங்கள் இங்குள்ளது.
கடந்த வருடம் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், சுமார் 50, 000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குமரிக்கு வருகை தந்துள்ளனர். ஆனால் இத்தகைய பெரும் கூட்டத்தினை எதிர் கொள்வதற்கான அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் இங்குள்ள சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. மேலும் சுற்றுசூழலை மேம்படுத்தவும், பாரம்பரிய மற்றும் இயற்கை தளங்களை பாதுகாக்கவும் வேண்டியது கட்டாயம்.
கன்னியாகுமரி மாவட்டம் மேம்படுத்தப்பட்ட ஒரு சுற்றுலா தலமாக மாறுவதன் மூலம் இங்குள்ள மக்களும், சிறு குறு வணிகர்களும் பயனடைந்து, வேலை வாய்ப்பினையும் பெருக்க இது காரணமாக அமையும். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கன்னியாகுமரியின் சுற்றுலா தலங்களை மேம்படுத்த ப்ரேத்யேக கவனத்தை செலுத்த வேண்டும். மேலும் இதற்காக ரூபாய் 2000 கோடியினை சிறப்பு நிதியாக ஒதுக்கி உலக சுற்றுலா வரைபடத்தில் குமரியை இடம் பெற செய்ய ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










