» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் பெண் வழக்கறிஞர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!

வியாழன் 13, மார்ச் 2025 12:22:14 PM (IST)

சென்னையில் உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர், தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன். இவரது மனைவி சுமதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 19 வயதில் ஜஸ்வந்த் குமார் மற்றும் 17 வயதில் லிங்கேஷ் குமார் என்று இரு மகன்கள் இருக்கின்றனர். மருத்துவர் பாலமுருகனுக்கு ரூ.5 கோடி அளவிற்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குடும்பத்தினர் 4 பேரும் அவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital

New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory