» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுகதான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பது மக்களின் நம்பிக்கை : முதல்வர் ஸ்டாலின்

புதன் 20, நவம்பர் 2024 4:12:18 PM (IST)



இனி எந்நாளும் திமுகதான் தமிழ்நாட்டை ஆளும், ஆளவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை(நவ.20) திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி பணிகள், பேரவைத் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இன்றுமுதல் தேர்தல் பிரசாரங்களை தொடங்குங்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை உயர்த்தவும், அகில இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி அரசை மலர வைக்கவும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் பவள விழாவைக் கண்டு கம்பீரமாக வளர்ந்து வருகிறது. ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட கழகத்துக்கு ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் வாய்ப்பைத் தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள்.

தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும், சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றியும் வளமான தமிழ்நாட்டைக் கழக அரசு உருவாக்கி வருகிறது. இனி எந்நாளும் திமுக தான் தமிழ்நாட்டை ஆளும், ஆளவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள். பயனடைந்தவர் சொல்லும் பாராட்டும், பயனாளிகளின் மனநிறைவும் சேர்ந்து 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை மீண்டும் மலர வைக்கும் என்பதில் அய்யமில்லை.

இந்நிலையில் கழக அரசின் சாதனைகள் - திட்டங்கள் - முதல்வரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள், தொலைநோக்குப் பார்வைகள் அனைத்தையும் மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலமாகத் தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்குங்கள் என்று கழக உடன்பிறப்புகள் அனைவரையும் இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

திமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும், ஒரு இயக்கம் என்று சொல்லத்தக்க வகையில் இன்று முதல் தேர்தல் பரப்புரைப் பணிகளைத் தொடங்குங்கள். துண்டுப் பிரசுரங்கள் - திண்ணைப் பிரச்சாரங்கள் என மக்கள் இயக்கத்தைத் தொண்டர்கள் அனைவரும் தொடங்குங்கள். ஏழாவது முறையும் ஏற்றம் காண்போம் என்று கோடிக்கணக்கான தொண்டர்களது உள்ளத்துக்கு அன்பான வேண்டுகோளை வைத்துள்ளது.

தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும், சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றியும் வளமான தமிழ்நாட்டைக் கழக அரசு உருவாக்கி வருகிறது. இனி எந்நாளும் திமுகதான் தமிழ்நாட்டை ஆளும், ஆளவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள். பயனடைந்தவர் சொல்லும் பாராட்டும், பயனாளிகளின் மனநிறைவும் சேர்ந்து 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை மீண்டும் மலர வைக்கும் என்பதில் அய்யமில்லை.

இந்நிலையில் கழக அரசின் சாதனைகள் - திட்டங்கள் - முதல்வரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள், தொலைநோக்குப் பார்வைகள் அனைத்தையும் மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலமாகத் தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்குங்கள் என்று கழக உடன்பிறப்புகள் அனைவரையும் இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.


மக்கள் கருத்து

உண்மNov 20, 2024 - 04:29:29 PM | Posted IP 172.7*****

திமுக❌ திமுக குடும்பங்கள் ✔

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory