» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஐடிஐயில் நேரடி சேர்க்கை ஜீலை 31 வரை நீடிப்பு : ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்!

வெள்ளி 26, ஜூலை 2024 10:27:41 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு துணை தேர்வு எழுதிய மாணவர்கள் அரசு, தனியார் ஐடிஐயில் நேரடி சேர்க்கை ஜீலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார். 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஜடிஜ) நடப்பு ஆண்டில் துணை தேர்வு எழுதிய 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டிற்கான அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் வெல்டர், பிளம்பர், வயர்மேன் போன்ற பிரிவுகளுக்கும், மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், ஏசி மெக்கானிக், ஊழுPயு மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தொடங்கப்பட்ட 4.ழு தொழில் பிரிவுகளுக்கு பேட்டை மற்றும் இராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் தங்களின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், மொபைல் எண், இமெயில் ஜடி, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, பேட்டை, அம்பாசமுத்திரம், இராதாபுரம் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும், தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் நேரடியாக விண்ணப்பித்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக்கருவி, காலணி, பஸ் பாஸ் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/-உதவித்தொகை வழங்கப்படும்.பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். 

மகளிருக்கு வயது வரம்பு 14 மற்றும் உச்சவரம்பு இல்லை மற்றும் ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை. விருப்பமுடைய தகுதி வாய்ந்த நபர்கள் நேடியாக விண்ணப்பிக்க, கால அவகாசம் வரும் ஜுலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 8903709298, 9486251843, 9499055790 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory