» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்லை ரவுடிக்கு தொடர்பு இல்லை - எஸ்பி விளக்கம்

வியாழன் 25, ஜூலை 2024 12:13:59 PM (IST)

சென்னை போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி நெல்லையில் கைது செய்யப்பட்டார். அவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும், எந்த தொடர்பும் இல்லை’’ என்று நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள அய்யா கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து மாரியப்பன். இவருடைய மகன் வைரமணி (25).சென்னையில் வசித்து வந்த இவர் சமீபத்தில் தனது சொந்த ஊரான வீரவநல்லூருக்கு வந்தார். இந்த நிலையில் வைரமணி, ஒரு தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக, அவரை நேற்று முன்தினம் இரவு வீரவநல்லூர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த வைரமணி, கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கூட்டாளி என்று கூறப்படுகிறது. இவர் மீது சென்னை மரக்காணம், வில்லிவாக்கம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அவரது பெயரை ரவுடி பட்டியலில் சேர்த்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

ஆற்காடு சுரேஷின் கூட்டாளிகள் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஒருவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டர். இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்து பதுங்கியிருந்த வைரமணி கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் கூறுகையில், ‘‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள வைரமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory