» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தோவாளை சானலில் ரூ.1.40 கோடியில் சீரமைப்பு பணி: ஆட்சியர் ஆய்வு!

திங்கள் 22, ஜூலை 2024 10:07:49 AM (IST)



தோவாளை சானலினை ரூ.1.40 கோடி மதிப்பில் நிரந்தரமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கருவி – தூவச்சி பகுதியில் நடைபெற்று வரும் தோவாளை சானல் நிரந்தர சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது தோவாளை ஊராட்சி ஒன்றியம் திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கருவி - தூவச்சி பகுதி தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மணல் மூட்டைகள் அடுக்கி போர்காலக் அடிப்படையில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தோவாளை சானலினை நிரந்தரமாக சீரமைக்க வேண்டுமென விவசாயிகள், விவசாய சங்கங்கள், கால்வாய் பாசன விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில் தோவாளை சானலினை சீரமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு இக்கோரிக்கையினை ஏற்று வெள்ள சேத பகுதிகளை நிரந்தரமாக மீட்டெடுக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடி மதிப்பில் தோவாளை சானலினை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து தோவாளை சானலினை நிரந்தரமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணியினை முடித்து பொதுமக்கள், விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென துறை அலுவலர்களுக்கு அறிவுறத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory