» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக ஆர். அழகுமீனா நியமனம்!

செவ்வாய் 16, ஜூலை 2024 4:27:20 PM (IST)

குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ஆர். அழகுமீனா நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக உள்துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ராமநாதபுரம் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன், ராணிப்பேட்டை ஆட்சியர் எஸ். வளர்மதி, அரியலூர் ஆட்சியர் ஜெ. ஆனி மேரி சுவர்ணா, கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜதாவத் உள்பட 10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை ஆட்சியராக டாக்டர் ஜெ யு சந்திரகலா

புதுக்கோட்டை ஆட்சியராக எம். அருணா

நீலகிரி ஆட்சியராக லக்‌ஷ்மி பாவ்யா டன்னீரு

தஞ்சாவூர் ஆட்சியராக பி. பிரியங்கா

நாகப்பட்டினம் ஆட்சியராக பி. ஆகாஷ்

அரியலூர் ஆட்சியராக பி. ரத்தினசாமி

கடலூர் ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில் குமார்

கன்னியாகுமரி ஆட்சியராக ஆர். அழகுமீனா

பெரம்பலூர் ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ்

ராமநாதபுரம் ஆட்சியராக சிம்ரன்ஜீத் சிங்கலோன் நியமிக்கப்பட்டுள்ளனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory