» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 4:36:52 PM (IST)

விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகளை புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் (CoE), விளையாட்டு விடுதிகள் (SH) மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகள் (SHE) பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2024-2025-ஆம் ஆண்டிற்கான முதன்மை நிலை விளையாட்டு மையம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வுகள் குறித்த விளக்கம் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மை நிலை விளையாட்டு மையம் (CoE) - (6th, 7th & 8th Std)- மாநில அளவிலான தேர்வுகள்

தடகளம் (ஆ) & (பெ), குத்துச்சண்டை (ஆ) & (பெ)மேசைப்பந்து (ஆ) & (பெ), டேக்வாண்டோ (ஆ) & (பெ) பளுதூக்குதல் (ஆண்கள் மட்டும்) - ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம். சென்னை-07.05.2024 காலை 7:00 மணி

இறகுப்பந்து (ஆ) & (பெ), வில்வித்தை (ஆ) & (பெ) - நேரு பூங்கா விளையாட்டரங்கம், சென்னை 07.05.2024 - காலை 7:00 மணி
ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆ) & (பெ), நீச்சல் (ஆ) & (பெ)- வேளச்சேரி நீச்சல் குள வளாகம், சென்னை- 07.05.2024 - காலை 7:00 மணி

டென்னிஸ் (ஆ) & (பெ),- நுங்கம்பாக்கம், டென்னிஸ் விளையாட்டரங்கம், சென்னை-07.05.2024 - காலை 7:00 மணி

சைக்கிளிங் (ஆ) & (பெ)- தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகம், மேலகோட்டையூர் (TNPESU) செங்கல்பட்டு- 07.05.2024 - காலை 7:00 மணி

விளையாட்டு விடுதி (Sports Hostel) – (7th, 8th,, 9th & 11th Std)- மாவட்ட அளவிலான தேர்வுகள்

தடகளம் (ஆ) & (பெ), கூடைப்பந்து (ஆ) & (பெ) கால்பந்து (ஆ) & (பெ), 

கைப்பந்து (ஆ) & (பெ), ஹாக்கி (ஆ) & (பெ), கபாடி (ஆ) & (பெ), 

கையுந்துபந்து (ஆ) & (பெ), கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்), நீச்சல் (ஆண்கள் மட்டும்) - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - நாகர்கோவில், அண்ணா விளையாட்டு அரங்கம் - ஆண்கள் - 10.05.2024-காலை 7:00 மணி & பெண்கள் - 11.05.2024- காலை 7:00 மணி

விளையாட்டு விடுதி மாநில அளவிலான நேரடி தேர்வு (Sports Hostel – State Level Direct Selection) (7th, 8th,, 9th & 11th Std)

குத்துச்சண்டை (ஆ) & (பெ), வாள்விளையாட்டு (ஆ) & (பெ), ஜுடோ (ஆ) & (பெ), பளுதூக்குதல் (ஆ) & (பெ), ஸ்குவாஷ் (ஆண்கள் மட்டும்) - ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை - 13.05.2024 (ஆண்கள் மட்டும்) - காலை 7:00 மணி & 14.05.2024 (பெண்கள் மட்டும்)-காலை 7:00 மணி

டேக்வாண்டோ (ஆ) & (பெ) - மாவட்ட விளையாட்டரங்கம், கடலூர் - 13.05.2024 (ஆண்கள் மட்டும்)

காலை 7:00 மணி14.05.2024(பெண்கள் மட்டும்)-காலை 7:00 மணி

மல்லர்கம்பம் (ஆண்கள் மட்டும்) - மாவட்ட விளையாட்டரங்கம், விழுப்புரம்-13.05.2024 (ஆண்கள் மட்டும்)

காலை 7:00 மணி14.05.2024(பெண்கள் மட்டும்)-காலை 7:00 மணி

மல்யுத்தம் (Wrestling) (ஆண்கள் மட்டும்) - வூஷூ (Wushu) (ஆண்கள் மட்டும்) - மாவட்ட விளையாட்டரங்கம், திருச்சி -13.05.2024 (ஆண்கள் மட்டும்)

காலை 7:00 மணி14.05.2024(பெண்கள் மட்டும்)-காலை 7:00 மணி

சிறப்பு நிலை விளையாட்டு விடுதி (SHE) (கல்லூரி மாணவ, மாணவியர்க்கான)

தடகளம் (ஆ) & (பெ), குத்துச்சண்டை (ஆ) & (பெ), கபாடி (ஆ) & (பெ), பளுதுாக்குதல் (ஆ) & (பெ),- ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை - 06.05.2024 / காலை - 7:00 மணி

கூடைப்பந்து (ஆ) & (பெ), கையுந்துப்பந்து (ஆ) & (பெ), கைப்பந்து (ஆ) & (பெ), கால்பந்து (ஆ) & (பெ)வாள் விளையாட்டு (ஆண்கள் மட்டும்) - நேரு உள் விளையாட்டரங்கம், சென்னை - 06.05.2024 / காலை - 7:00 மணி

ஹாக்கி (ஆ) & (பெ) - MRK ஹாக்கி விளையாட்டரங்கம், சென்னை - 06.05.2024 / காலை - 7:00 மணி

நீச்சல் (பெண்கள் மட்டும்) - நீச்சல் குள வளாகம், வேளசேரி, சென்னை- 06.05.2024/ காலை - 7:00 மணி

ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் :

சிறப்பு நிலை விளையாட்டு விடுதி (SHE) - 05.05.2024 / மாலை 5.00 மணி

முதன்மை நிலை விளையாட்டு மையம் (CoE) - 06.05.2024 / மாலை 5.00மணி

விளையாட்டு விடுதி (SH) - 08.05.2024 / மாலை 5.00 மணி

ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசி 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். ஆடுகள தகவல் மையத்தின் பணி நேரம் காலை - 10:00 மணி முதல் மாலை - 5:45 வரை.

மேலும் மாவட்ட அளவிலான தேர்வில் தேர்வுசெய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ / மாணவியர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் 26.04.2024 முதல் www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory