» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓடைக்குள் கார் பாய்ந்து ஒப்பந்ததாரர், மனைவி பலி: சங்கரன்கோவில் அருகே பரிதாபம்!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 8:57:27 AM (IST)

சங்கரன்கோவில் அருகே ஓடைக்குள் கார் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தம்பதி இறந்தனர். திருமணமான மகளை பார்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இ்ந்த பரிதாப சம்பவம் நடந்தது.

நெல்லை பாளையங்கோட்டை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ( 54), அரசு ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி சுமிதா (47). இவர்கள் தங்களுடைய மகளை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால், மகளை பார்ப்பதற்கு கணவன்- மனைவி இருவரும் காரில் ராஜபாளையம் சென்றனர். அங்கு மகளை பார்த்து விட்டு மீண்டும் மாலையில் ராஜபாளையத்தில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை வெங்கடேஷ் ஓட்டினார்.

இரவு 8 மணி அளவில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நெடுங்குளம் விலக்கு அருகே வந்தபோது கார் திடீரென நிலைதடுமாறியது. இதனால் வெங்கடேசின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையோரத்தில் இருந்த ஓடைக்குள் பாய்ந்தது. இதில் இருந்த தண்ணீரில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. ஓடையில் 5 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடந்துள்ளது.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் வந்தவர்கள் ஓடி வந்தனர். இதுகுறித்து உடனடியாக சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் மற்றும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கடும் போராட்டத்திற்கு பிறகு சுமார் 10.30 மணிக்கு காரை மீட்டனர். காரின் இடிபாடுகளில் இருந்து வெங்கடேஷ், சுமிதா ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கணவன்- மனைவி இருவரும் ஏற்கனவே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory