» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதல்ஜோடியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம்-நகை பறிப்பு : 3 வாலிபர்கள் கைது

வியாழன் 25, ஏப்ரல் 2024 9:07:01 AM (IST)

வள்ளியூரில் காதல்ஜோடியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை-பணம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு. இவருடைய மகன் ஞானவேல் (23). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். 

கடந்த 20-ந்தேதி ஞானவேல் காதலியை பார்ப்பதற்காக வள்ளியூர் முருகன் கோவிலுக்கு தனது நண்பர்கள் இருவருடன் வந்தார். பின்னர் காதல்ஜோடி, கோவில் வளாகத்தில் உள்ள கல்மண்டபத்தில் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்த செல்போன், பணம், தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இதுகுறித்து ஞானவேல் அளித்த புகாரின்பேரில், வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வள்ளியூர் காமராஜர் நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் கலையரசன் (25), வேலைய்யா என்ற குட்டி, வள்ளியூர் அருகே கால்கரையைச் சேர்ந்த மாணிக்கம் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து காதல்ஜோடியை மிரட்டி நகை, பணம், செல்போனை பறித்தது தெரிய வந்தது. எனவே, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, நகை, பணம், செல்போனை மீட்டனர்.

பின்னர் அவர்களை வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான கலையரசன் பந்தல் போடும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். வள்ளியூரில் காதல்ஜோடியை மிரட்டி நகை-பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory