» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

வெள்ளி 19, ஏப்ரல் 2024 5:35:03 PM (IST)

பாஜக ஆதரவு வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், வாக்காளர் பட்டியலில் ஏராளமானோர் பெயர் இடம்பெறவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். ஒரு வீட்டில் இறந்த கணவனின் பெயர் பட்டியலில் உள்ளது. ஆனால் மனைவி பெயர் இல்லை. 

நிறைய வாக்காளர்களை நீக்கிவிட்டு வாக்குப்பதிவு நடத்தி எந்த பயனும் இல்லை. வாக்காளர் பட்டியலில் இல்லாத நிறைய பேர் வாக்குவாதம் செய்வதால் வாக்குப்பதிவு தாமதம். கோவை தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. கோவையில் தேர்தல் ஆணையத்தின் களப்பணி சரியாக இல்லை. வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க வந்தோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory